மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி ஏத்துக்கால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட முகாம் அமைந்திருந்த காணியினை ஏறாவூர்பற்று பிரதேச உறுப்பினர் திரு.வேல்பரமதேவா அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் 29.08.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
29.08.2025 காலை இடம்பெற்ற ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உதவியோடு குறித்த காணியினை களுவன்கேணி, வந்தாறுமூலை, முறக்கொட்டான்சேனை மற்றும் அண்டிய பகுதியில் உள்ள மக்களுக்கு சுற்றுலா பொழுதுபோக்கு மையமாக மாற்றுவது தொடர்பாக கலந்துரையாடியதுடன் தொடர்ந்து குறித்த காணியில் நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதன் பின்னர் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு காணி விடுவிப்பது தொடர்பில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதோடு இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கள விஜயத்தின் போது ஏறாவூர்பற்று பிரதேச உறுப்பினர் திரு.வேல்பரமதேவா, ஏறாவூர்பற்று பிரதேச உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளருமான த.பிரபாகரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

