அனைவருக்கும் சட்டத்தின் முன் சமமான யுகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்குகள் தின நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய எந்தவொரு நபருக்கும் தகுதி பாராது தண்டனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பணத்தை மீள அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அழ முடியும், முணுமுணுக்க முடியும், கூச்சலிட முடியும். எனினும் முன்னால் வைக்கப்பட்ட அடி ஒருபோதும் பின்வாங்கப்படமாட்டாதென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.