போரதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் ஜோலி வோஸ் (Jolly Boys) விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் 10.08.2025 இடம்பெற்றது.
இறுதியில் போட்டியில் மண்டூர் அருண்மணி விளையாட்டுக் கழகம், திருப்பழுகாமம் சூட்டிங்ஸ்டார் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டது.இப் போட்டியில் மண்டூர் அருண்மணி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனானது.
இப் போட்டி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் ஆகியோரும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.





