ஜகாா்த்தா, இந்தோனேசியா: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்களில் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை மற்றும் இந்தோனேசிய பொலிஸாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக இந்த முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும், திறமையையும் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த கைது நடவடிக்கை இலங்கையின் குற்றப்புலனாய்வு நடவடிக்கைகளில் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
#கெஹெல்பத்தரபத்மே#பாதாளஉலகக்குழு#இந்தோனேசியபொலிஸ்#விருதுகள்#சர்வதேசகுற்றவாளிகள்#சட்டவிரோதகுற்றங்கள்

