இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய, மலையகத்தின் தந்தை என அன்புடன் அழைக்கப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112வது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 30, 2025) அனுசரிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த இவர், இலங்கை அரசியலில் பல முக்கிய மைல்கற்களைப் பதித்துள்ளார்.
சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தொண்டமான், இலங்கை, இந்திய காங்கிரஸின் உருவாக்கத்திலும், அதன் தலைவராகவும் முக்கியப் பங்காற்றினார். பின்னர், இந்த அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகப் பெயர் மாறியபோதும் அதன் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகித்தார். பல்வேறு அமைச்சரவைப் பதவிகளை வகித்த இவர், தேசிய அளவில் ஒரு சிறந்த தலைவராகவும் போற்றப்பட்டார்.
இவரது பிறந்தநாளையொட்டி, கொழும்பிலும் மலையகப் பகுதிகளிலும் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.
#சௌமியமூர்த்திதொண்டமான்#மலையகத்தந்தை#இலங்கைஅரசியல்#இலங்கைதொழிலாளீர்காங்கிரஸ்#பெருந்தலைவர்#SoumyamoorthyThondaman#SriLankaPolitics#Thondaman#CWC