இன்றைய தினம் 13.08.2025 இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்ட விரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு, மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள், செம்மணியில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்கு நீதி கோரினர். அத்துடன், சமூகத்தில் சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த போராட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்காக எமது செய்திகளுடன் இணைந்திருங்கள்.



