அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று 27.08.2025 அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

