வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு நேர்த்தியாக கிடைக்கும் பசு மாடுகளை சமுதாயத்தில் மிகவும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு கட்டம் கட்டமாக இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நான்காம் கட்டமாக மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா மூன்று (03) பேர் வீதம் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆறு (06) பயனாளிகளுக்கு பசு வழங்கி வைக்கும் நிகழ்வு 24.08.2025 அன்று ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்குமார், தேச மகா சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.