ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அமுலாக்கத்தில் இலங்கையின் பண்மைத்துவம் மற்றும் சிறுபாண்மையினரை வலுவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் 14/08/2025 மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் ஹோட்டலில் இடம்பெற்றது.
பல சமூகங்களுக்குள் வாழ்கின்ற குழுக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுவூட்டுவதனூடாகஉள்ளக ஆட்சியில் அவர்களின் வினைத்திறன் மிக்க பங்குபற்றுதலை உறுதிப்படுத்தி, அவர்களுடைய பிரச்சினைகளையும், தேவைகளையும் தாமே அடையாளப்படுத்தி குரலெழுப்புவதனூடாக அவற்றுக்கு நீடித்திருக்கக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்ட திட்டத்தினை குறித்த நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







